search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் உறுப்பு தான விழிப்புணர்வு"

    உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 70 சதவீத மகப்பேறு அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதன்மையாக விளங்குகிறது. இதேபோன்று மகப்பேறு இறப்பு சதவீதம் என்பது 5 மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்திற்கு 62 ஆக இருந்தது. ஆனால் அது தற்போது 51 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே குறைந்த இறப்பு சதவீதம் ஆகும்.

    தமிழக சுகாதாரத்துறை சார்பில் விபத்தினால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கான நிலைப்படுத்தும் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. இதை விரிவுபடுத்தும் விதமாக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகம் விபத்து நடக்கும் பகுதிகளில் இத்தகைய நிலைப்படுத்தும் மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

    அனைத்து கிராமங்களிலும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை அனைத்து துறையுடன் சேர்ந்து முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. கிராமப்புற மக்கள் காய்ச்சல் என்று வந்தவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அல்லது படுக்கை வசதி கொண்ட தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதற்கான சான்றிதழை விரைவில் தமிழக முதல்வர் வெளியிடுவார்.


    தமிழக சுகாதாரத்துறையை தொடர்ந்து பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு டிசம்பர் 9-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டு கவுன்சிலிங் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் மருத்துவர் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
    ×